

சேலம்:
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி யில் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
தவறி விழுந்த மாணவர்
இந்த பள்ளி வளாகத்தில் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 77 மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள்.
இதில் 9-ம் வகுப்பு படிக்கும் சேலம் மாவட்டம் கருமந்துறை தலைக்கரை பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் முருகன் (வயது 14) நேற்று மதியம் உணவு அருந்தி விட்டு வகுப்பறைக்கு சென்ற போது முதல் மாடியில் இருந்து தவறி விழுந்தார்.
தொடர் சிகிச்சை
இதில் பலத்த காயம் அடைந்த மாணவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காகாபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.