பண்ருட்டி அருகே 2 வயது சிறுவன் மர்ம சாவு

புதுப்பேட்டை போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பண்ருட்டி அருகே  2 வயது சிறுவன் மர்ம சாவு
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஓறையூர்காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அகல்யா (வயது 19), இவருக்கு சசிதரன் என்ற 2 வயது மகன் இருந்தான். அகல்யா,கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் மகனுடன் வசித்துவந்தார். தனது மகன் சசிதரனுக்கு இட்லி ஊட்டி உள்ளார். சிறிது நேரத்தில் சிறுவனை தூங்க வைத்துவிட்டு வீட்டு வேலையை கவனித்தார்.பிறகு குழந்தையை எழுப்பிய போது குழந்தை அசைவில்லாமல் இருந்தது. குழந்தையை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து அகல்யாவின் அண்ணன் அசோக் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரே தபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com