பொள்ளாச்சியில் 15 வயது மாணவி பலாத்காரம்

மாணவிக்கு சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த சபரியுடன் பழக்கம் ஏற்பட்டது. மாணவி தனது காதலன் சபரியிடம் தெரிவித்தார்.
பொள்ளாச்சியில் 15 வயது மாணவி பலாத்காரம்
Published on

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி சபரி (வயது 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது மகளை கண்டித்தனர். இது குறித்து மாணவி தனது காதலன் சபரியிடம் தெரிவித்தார்.

அவர் மாணவியை ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அங்கு வைத்து மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். மறுநாள் மாணவி தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது அவரிடம் பெற்றோர் எங்கு சென்றாய் என்று கேட்டனர். அப்போது வாலிபர் தன்னை பலாத்காரம செய்ததை மாணவி கூறினார்.

பின்னர் அவர்கள் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சபரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com