கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு அசத்திய 92 வயது மூதாட்டி

52 ஆண்டுகளாக அப்பம் சுட்டு வருகிறார்.40 நாட்களாக விரதம் இருந்து அப்பம் சுடுவது குறிப்பிடத்தக்கது.
கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு அசத்திய 92 வயது மூதாட்டி
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலியார் பட்டித் தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 100 ஆண்டுகளாக சிவராத்திரி அன்று நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்று வருவது வழக்கம்.

இந்த ஆண்டு மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் அந்த பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் என்ற 92 வயது மூதாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் எரியும் விறகு அடுப்பில் நெய்யை கொதிக்கவிட்டு அதில் பனைவெல்லம் கலந்த அரிசி மாவினால் செய்யப்பட்ட அப்பங்களை கொதிக்கும் நெய்யில் போட்டு கரண்டியை பயன்படுத்தாமல் வெறும் கையால் அப்பத்தை எடுத்தது சுற்றி நின்றிருந்த ஏராளமான பக்தர்களை ஆச்சரியப்பட வைத்தனர்.

மேலும் கொதிக்கும் நெய்யை எடுத்து இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெற்றியில் பூசி விட்டு அப்பத்தை பிரசாதமாக வழங்கினர்.

இன்று அதிகாலை வரை நடந்த இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்திருந்தனர்.

மகா சிவராத்திரி அன்று முத்தம்மாள் என்ற மூதாட்டி கடந்த 52 ஆண்டுகளாக அப்பம் சுட்டு வருகிறார். இதற்காக 40 நாட்களாக விரதம் இருந்து அப்பம் சுடுவது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com