பெண்ணிடம் 9 பவுன் செயின் பறிப்பு

கழுத்தில் கிடந்த 9 பவுன் செயினை 2 மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பெண்ணிடம் 9 பவுன் செயின் பறிப்பு
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே அம்மாசத்திரம் அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜதுரை.

இவரது மனைவி விஜய லட்சுமி (வயது 45).

இந்நிலையில், இவர் சாரங்கபாணி கீழ வீதியில் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிள் பின்னால் அடையா ளம் தெரியாத மர்மநபர்கள் பின்தொடர்ந்தனர்.

மோட்டார் சைக்கிள் சாரங்கபாணி கீழவீதி பெரிய தெரு சந்திப்பு பகுதியில் வந்தபோது, விஜயலட்சுமி கழுத்தில் கிடந்த 9 பவுன் செயினை மோட்டார் சைக்கி ளில் வந்த 2 மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன், சப்-இன்ஸ்பெ க்டர் கீர்த்திவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் தப்பி ஓடிய மர்மநப ர்களை போலீ சார் வலைவீசி தேடிவருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com