திண்டுக்கல் மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 9 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றது.வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

பழனி:

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

போலீசார் சோதனையில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிவகணேஷ் (21), சையத் இப்ராஹிம் (26), ரேணுகா (29), மணி (21), தனபாலன் (20), வினோத் பாண்டியன் (23), ரதின் (20), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் (19), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (31) ஆகிய 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com