எரியோட்டில் சேவல் வைத்து சூதாட்டம் நடத்திய 8 பேர் கைது -11 பைக், ரூ.72 ஆயிரம் பறிமுதல்

வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அனுமதி பெறாமல் சேவல்சண்டை நடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்து ரூ.72 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

எரியோடு:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அனுமதி பெறாமல் சேவல்சண்டை நடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி உத்தரவின் பேரில் வடமதுரை, எரியோடு போலீசார் இதுகுறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இன்று எரியோடு கோவிலூர் பகுதியில் பண்ணைக்குளம் என்ற இடத்தில் சேவல் சூதாட்டம் நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட கோவிலூரை சேர்ந்த பெருமாள், திருமுருகன், குஜிலியம்பாறையை சேர்ந்த காளிமுத்து, நடராஜன், கோம்பையை சேர்ந்த தேவராஜ், தவசிமடையை சேர்ந்த தங்கபாண்டியன், மணப்பாறையை சேர்ந்த ரவிக்குமார் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.72 ஆயிரம் ரொக்கப்பணம், 2 சேவல்கள் மற்றும் 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அனுமதி பெறாமல் சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com