சாணார்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

குரும்பபட்டி முத்தாலம்மன் கோவில் பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.சாணார்பட்டி போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

குள்ளனம்பட்டி:

சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் தலைமையில் ஏட்டுகள் தோமனிக்,கோவிந்தராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது கூவனூத்து குரும்பபட்டி முத்தாலம்மன் கோவில் பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கூவனூத்து குரும்பபட்டியை சேர்ந்த ரத்தினகிரி (வயது 67),காலனி தெருவை சேர்ந்த முத்துக்குமார் (45),வடக்கு தெருவை சேர்ந்த ராமசாமி (70),குரும்பபட்டியைச் சேர்ந்த ரவி (54),முருகேசன் (62) நொச்சி ஓடைப்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி (60) ஆர்.எம்.டி.சி.காலனியைச் சேர்ந்த சுப்ரமணி (52)என்பது தெரியவந்தது.

இதையடுத்து சாணார்பட்டி போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.5020 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com