கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 6 பேர் கைது

குட்கா விற்ற 3 பேரை கைது செய்தனர்.பணம் வைத்து சூதாடிய பெரிய மோட்டூர் முருகன் (40), எம்.சி.பள்ளி பூபதி (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 6 பேர் கைது
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா மத்திகிரி போலீசார் மிடிகிரிப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை சோதனை செய்த போது அவர் 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவரது பெயர் ஸ்ரீராம் (20), ஓசூர் ரெயில் நிலைய சாலை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சின்ன மாரியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்து கொண்டிருந்த ஆலப்பட்டி அருகே பாசிப்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி (48), லைன்கொல்லை சீனிவாசன் (44) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா, என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் குட்கா விற்ற கெலமங்கலம் சுல்தான்பேட்டை ரகு (65), களர்பதி அச்சுதன் (37), கதவணை பெருமாள் (33) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

கே.ஆர்.பி. அணை போலீசார் மோட்டூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பெரிய மோட்டூர் முருகன் (40), எம்.சி.பள்ளி பூபதி (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com