கலந்தாய்வுக்கு காத்திருக்கும் 5326 வேளாண் மாணவர்கள்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு நடத்த வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல்:

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 3 உறுப்புக் கல்லூரிகள் 3 அரசு இணைப்புக்கல்லூரிகள், 10 தனியார் இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் வேளாண், தோட்டக்கலை பட்டய படிப்புகள், வேளாண் பொறியியல் பட்டய படிப்பு என 3 வகை உள்ளன.

வேளாண் பொறியியல் பட்டயபடிப்பு நடப்பு ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் வேளாண் பல்கலைக்கழக பட்டய படிப்பு சேர்க்கை கலந்தாய்வு காலதாமதமாக நடக்கிறது. பட்டயபடிப்புக்கான கலந்தாய்வு அறிவிக்கப்ப டவில்லை.

இந்த படிப்புக்கு விண்ணப்பித்த 5326 மாணவர்கள் கலந்தாய்வு தேதியை எதிர்நோக்கியுள்ளனர். எனவே பல்கலைக்கழக நிர்வாகம், வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டய படிப்புக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com