5 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா

பொங்கல் சீர்வரிசைகளோடு புத்தக ங்களும் மரக்கன்று களும் வழங்கப்பட்டது. 25-வது ஆண்டு சமத்துவ பொங்கல் விழா சாமுண்டிபுரம் பகுதியில் நடைபெற்றது.
ம.தி.மு.க. சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவை ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ தொடங்கிவைத்தார். அருகில் மாநகர மாவட்ட செயலாளர், கவுன்சிலர் நாகராஜ் மற்றும் பலர் உள்ளனர். 
ம.தி.மு.க. சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவை ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ தொடங்கிவைத்தார். அருகில் மாநகர மாவட்ட செயலாளர், கவுன்சிலர் நாகராஜ் மற்றும் பலர் உள்ளனர். 
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டு சாமுண்டிபுரம் பகுதியில் மதிமுக சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழாவின் போது சமத்துவ பொங்கல் கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

25-வது ஆண்டு சமத்துவ பொங்கல் விழா

அந்த வகையில் இன்று திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டு கவுன்சிலரும் திருப்பூர் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளருமான நாகராஜ் ஏற்பாட்டில் 25-வது ஆண்டு சமத்துவ பொங்கல் விழா சாமுண்டிபுரம் பகுதியில் நடைபெற்றது.

இதில் அனைத்து மதத்தை சார்ந்த 5000 பெண்கள் கலந்துகொண்டு சூரிய பொங்கல் வைத்தனர்.

இந்நிகழ்வை மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

பெண்கள் முளைப்பாரி

நிகழ்ச்சியின் முன்னதாக சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வ லமாக வந்தனர் .

இதனைத் தொடர்ந்து மதிமுக கொடியினை தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ ஏற்றி வைத்து பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்.

பொங்கல் சீர்வரிசை

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக சாமுண்டி புரத்தை சேர்ந்த புதுமண தம்பதிகளுக்கு மதிமுக சார்பில் பொங்கல் சீர்வரிசைகளோடு புத்தக ங்களும் மரக்கன்று களும் வழங்கப்பட்டது.

பரிசு பொருட்கள்

இதனைத் தொடர்ந்து பொங்கல் வைத்த பெண்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்த 400க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com