கங்கைகொண்டானில் 50 கிலோ காப்பர் வயர் திருட்டு

கர்நாடகா மாநிலம் பெங்களூரு காவேரி நகரை சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 50). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு மேலாளராக பணியாற்றி வருகிறார்.அங்கு வைக்கப்பட்டிருந்த 50 கிலோ காப்பர் வயர்கள் திருட்டு போனது.
கங்கைகொண்டானில் 50 கிலோ காப்பர் வயர் திருட்டு
Published on

நெல்லை:

கர்நாடகா மாநிலம் பெங்களூரு காவேரி நகரை சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 50). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு மேலாளராக பணியாற்றி வருகிறார்.

அந்நிறுவன வளாகத்தில் ஏராளமான காப்பர் வயர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த 50 கிலோ காப்பர் வயர்கள் திருட்டு போனது. இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் கங்கை கொண்டான் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பர் வயர்களை திருடிய மர்மநபர்களை தேடி வரு கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com