தருமபுரியில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு

பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முககவசம் அணிய வேண்டும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தருமபுரியில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

தருமபுரி,

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று தமிழகத்தில் 519 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

3660 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்ைச பெற்று வருகிறார்கள்.

நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து 502 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முககவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணிந்தால் கொரோனா பரவலை தடுக்க முடியும்.

வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்த உடன் கைகளை ேசாப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். அவ்வாறு கழுவினால் நோய் தொற்றை பரவாமல் தடுக்கலாம்.

தருமபுரி நேற்று மட்டும் 5 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களை வீடு மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்தம் 39 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com