கருமத்தம்பட்டி அருகே விடுதியில் 5 செல்போன்கள் திருட்டு

செல்வராஜ் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்தனர்.
கருமத்தம்பட்டி அருகே விடுதியில் 5 செல்போன்கள் திருட்டு
Published on

கோவை,

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது29). இவர் கணியூர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது அறையின் அருகே வடமாநிலத்தவர்கள் 3 பேர் வசித்து வருகிறார்கள். சம்பவத்தன்று காலை இவர் தங்கியிருந்த அறையின் அருகே இருந்த மற்றொரு அறையில் 5 செல்போன்கள் திடீரனெ திருடு போய் இருந்தது.இது தொடர்பாக செல்வராஜ் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்தனர். யாராவது அந்த ரூமிற்குள் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்ததா என போலீசார் ஆய்வு செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com