பஸ் கண்டக்டரை தாக்கிய 5 பேர் கைது

தனியார் பஸ், மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுக்கு வழிவிடவில்லை.போலீசார் வழக்குபதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.
கைதான 5 பேர்.
கைதான 5 பேர்.
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் அடுத்த கூகூரை சேர்ந்த தமிழழகன், (வயது 27) அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (28) பாண்டியன் (29) மகேஷ் பாபு, (38) பவித்ரன் (27) ஆகிய 5 பேர் 2 மோட்டார் சைக்கிளில் குடவாசல் மணக்காலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருவிடைச்சேரியிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுக்கு வழி விடவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் ஆலத்தூர் ரோடு பேருந்து நிறுத்தம் அருகே பஸ்சை மறித்து நிறுத்தினர்.

பின்னர் பஸ்சின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியை உடைத்து பஸ் கண்டக்டர் அருண்குமாரை தாக்கினர்.

இதில் காயம் அடைந்த அருண்குமார் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அருண்குமார் நாச்சியார் கோவில் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.

இது குறித்து நாச்சியார் கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com