44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு

வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பெரிய அளவிலான செஸ் போர்டு வரைந்திருந்தனர். அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு பெரிய செஸ் போர்டை பார்வையிட்டனர்.
வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெரிய அளவில் செஸ் போர்டு வரையப்பட்டு வைக்கப்பட்டிருந்த காட்சி
வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெரிய அளவில் செஸ் போர்டு வரையப்பட்டு வைக்கப்பட்டிருந்த காட்சி
Published on

‌ராசிபுரம்:

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பெரிய அளவிலான செஸ் போர்டு வரைந்திருந்தனர்.

இதனை நாமக்கல் மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், உதவி திட்ட அலுவலர் தெய்வம், வட்டார இயக்க மேலாளர் முருகேசன், வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கருணாகரன், கலைச்செல்வி, கலா, மணிமேகலை மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு பெரிய செஸ் போர்டை பார்வையிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com