கோவையில் கார் நிறுவன மேலாளரிடம் 4 பவுன் செயின் பறிப்பு

கத்தியை காட்டி மிரட்டி ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள தங்க செயினை பறித்து சென்றனர் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கோவையில் கார் நிறுவன மேலாளரிடம் 4 பவுன் செயின் பறிப்பு
Published on

கோவை,

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் பாயல் ஜெயின் (வயது 32). இவர் பட்டய கணக்காளராக (ஆடிட்டர்) உள்ளார்.

இந்த நிலையில் அவர் பணிமுடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது மெக்ரிகேர் ரோட்டில் பைக்கில் வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி, பாயல் ஜெயினிடம் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள தங்க செயினை பறித்து சென்றனர். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்தவர் பிரசாந்த் (29). இவர் கோவை காந்திபுரம், ராம் நகர் பகுதியில் தங்கியிருந்து அங்கு உள்ள கார் ஷோரூமில் மேனஜராக வேலை பார்க்கிறார்.

இந்த நிலையில் பிரசாந்த் நண்பர்களுடன் இரவு உணவு சாப்பிடுவதற்காக வெளியே புறப்பட்டு சென்றார்.

அப்போது பைக்கில் வந்த 2 பேர் வழிமறித்து, 4 பவுன் தங்க செயினை பறித்து தப்பினர். இதுகுறித்து பிரசாந்த் அளித்த புகாரின்பேரில் காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com