புளியம்பட்டி அருகே ஆடு திருடிய சிறுவன் உள்பட 4 பேர் கைது

பெருமாள் கனி 20 வெள்ளாடுகளை வீட்டின் அருகில் உள்ள தொழுவத்தில் கட்டி வைத்திருந்தார்.இந்நிலையில் காலையில் பார்த்தபோது ஒரு வெள்ளாடு மற்றும் குட்டிகளை காணவில்லை.
புளியம்பட்டி அருகே  ஆடு திருடிய சிறுவன் உள்பட 4 பேர் கைது
Published on

புதியம்புத்தூர்:

புளியம்பட்டி அருகே உள்ள மருதன்வாழ்வு கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மனைவி பெருமாள் கனி (வயது56). இவர் 20 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். அவர் ஆடுகளை வீட்டின் அருகில்உள்ள தொழுவத்தில் கட்டி வைத்திருந்தார்.

இந்நிலையில் காலையில் பார்த்தபோது ஒரு வெள்ளாடு மற்றும் குட்டிகளை காணவில்லை. இது குறித்து பெருமாள்கனி நாரை கிணறு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி என்.புதூர் கீழதெருவை சேர்ந்த கமலேஷ் கிரண் (21), ஓட்டப்பிடாரம் ரைஸ்மில் காலனியை சேர்ந்த முருகன் (19), மருதன்வாழ்வு கிராமத்தை சேர்ந்த பாலா (21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 17 வயது சிறுவனை கைது செய்து நெல்லை சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆடு மற்றும் குட்டிகளை மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com