வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் சாவு

சேலத்தில் வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலியனார்.இதுகுறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் சாவு
Published on

கொண்டலாம்பட்டி:

சேலம் அயோத்தியா பட்டணம் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி இவரது மகன் சேகர் (வயது 38). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் வீராணம் அருகே உள்ள சின்னனூர் மதுரைவீரன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வீராணம் பள்ளி ப்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் சசிகுமார் (வயது 34) மோட்டார்சைக்கிள் மோதியது.இதில் தலையில் பலத்த காயமடைந்த சேகரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.சசிகுமாருக்கு காலில் முறிவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுதூர் செட்டி காடு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (32). இவர் பெரிய புதூர் ஏரியில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம் பள்ளப்பட்டி சாமிநாதபுரம் மருதநாயகம் தெரு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் இவரது மகன் வினோத் குமார் ( 32). இவருக்கு திருமணமாகி உமாமகேஸ்வரி வயது 27 என்ற மனைவி உள்ளார்.வினோத்குமார் மது அதிகமாக குடித்து வந்துள்ளார். நேற்று மாலை வீட்டில் இருந்த வினோத்குமார் திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார்,உடனடியாக இவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com