சிங்காநல்லூரில் என்ஜினீயர் வீட்டில் 34 பவுன் நகை-ரூ.3 லட்சம் பணம் கொள்ளை

கடந்த 11-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு பாப்பம்பட்டியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றார். பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
சிங்காநல்லூரில் என்ஜினீயர் வீட்டில் 34 பவுன் நகை-ரூ.3 லட்சம் பணம் கொள்ளை
Published on

சிங்காநல்லூர்:

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிகோணாம் பாளையத்தை சேர்ந்தவர் அமர்நாத் சிங் (வயது 25). என்ஜினீயர். கடந்த 11-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு பாப்பம்பட்டியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றார்.

அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம், வளையல் உள்பட 34 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

மறுநாள் வீட்டிற்கு திரும்பிய அமர்நாத் சிங் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அமர்நாத் சிங் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்க ப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயர் வீட்டில் 34 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வீதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளை யர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என்றும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com