கங்கைகொண்டானில் சோலார் நிறுவனத்தில் 300 கிலோ காப்பர் வயர் திருட்டு

தனியாருக்கு சொந்தமான சோலார் நிறுவனம் ஒன்று மேட்டு பிராஞ்சேரியில் செயல்பட்டு வருகிறது. சுமார் 300 கிலோ எடை கொண்ட காப்பர் வயர்கள் திருட்டு போயிருந்தது.
கங்கைகொண்டானில் சோலார் நிறுவனத்தில் 300 கிலோ காப்பர் வயர் திருட்டு
Published on

நெல்லை:

நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள மேட்டு பிராஞ்சேரியில் தனியாருக்கு சொந்தமான சோலார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் காவலாளியாக நாங்குநேரி அருகே உள்ள சிந்தாமணியை சேர்ந்த முருகன்(வயது 48) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று நிறுவனத்தின் வளாகத்தில் ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு ஒரு மூலையில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 300 கிலோ எடை கொண்ட காப்பர் வயர்கள் திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் உடனடியாக கங்ைககொண்டான் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பர் வயர்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டு போன காப்பர் வயரின் மதிப்பு ரூ.90 ஆயிரம் என்று கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com