தொழில் முனைவோருக்கு ரூ.30 கோடி கடன்

சிறப்பு கடன் உதவி முகாம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டங்கில் நடைபெற்றது.மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி தலைமை தாங்கினார்.
தொழில் முனைவோருக்கு ரூ.30 கோடி கடன்
Published on

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் தொழில்துறை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கடன் உதவி முகாம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டங்கில் நடைபெற்றது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி தலைமை தாங்கினார். தொழில் முதலீட்டு கழகத்தின் சென்னை மண்டல மேலாளர் பழனிவேல், தொழில் முதலீட்டு கழக மறைமலைநகர் கிளை மேலாளர் சுந்தரம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வித்யா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார் சிப்காட் திட்ட அலுவலர் நளினி குறு சிறு தொழில் முதலீட்டு அசோசியேஷன் செயலாளர் தனசேகரன், கருங்குழி அரிசி ஆலை செயலாளர் குமார் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

இதில் தொழில் முனைவோர்களுக்கு கடன் தொகையாக ரூ.30 கோடி வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com