நத்தத்தில் பெண்ணிடம் செயின் பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை

செயின் பறித்ததாக கொடுத்த புகாரின்பேரில் வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியை சேர்ந்தவர் தமிழரசி (42) இவர் கடந்த மார்ச் மாதம் நத்தம்- மதுரை சாலையில் உள்ள நல்லாகுளம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த ஹரிதர்சன் (26) என்பவர் 6 பவுன் தங்க செயினை பறித்து சென்றார்.

இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசில் தமிழரசி புகார் செய்தார். அதன் பேரில் நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து ஹரிதர்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரணை செய்து வந்தார். இந்நிலை யில் இந்த வழக்கு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி உதயசூரியா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் ஹரிதர்சனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளி த்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com