நத்தத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

புகாரின் பேரில் நத்தம் போலீசார் ராமலிங்கத்தை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.ராமலிங்கத்துக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
ராமலிங்கம்.
ராமலிங்கம்.
Published on

நத்தம்:

நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது59). இவர் சிறுமியிடம் பாலியல் ரீதியாக சைகை காட்டி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் நத்தம் போலீசார் ராமலிங்கத்தை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இது குறித்த விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அறிவுறுத்தலின் பேரில் நத்தம் போலீசார் மற்றும் அரசு வக்கீல் ஆகியோர் போதிய ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி கருணாநிதி ராமலிங்கத்துக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com