தூத்துக்குடியில் 3 டன் ரேசன் துவரம் பருப்பு பறிமுதல்: டிரைவர் தப்பி ஓட்டம்

பருப்பு கடத்தி வரப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல்.60 மூட்டை 3 ஆயிரம் கிலோ ரேசன் துவரம் பருப்பை பறிமுதல்.
தூத்துக்குடியில் 3 டன் ரேசன் துவரம் பருப்பு பறிமுதல்: டிரைவர் தப்பி ஓட்டம்
Published on

தமிழகம் முழுவதும் ரேசன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டும் அத்தியாவசிய பொருட்கள் கடத் தலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில் உணவுப் பாொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் மும்முரமாக ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை பகுதிக்கு வெளியூரில் இருந்து ரேஷன் அரிசி மற்றும் பருப்பு கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அருப்புக் கோட்டையில் குடிமை பொருள் தனி வட்டாட்சியர் அறிவழகன் தலைமையிலான வருவாய்த்துறையினர் அதிரடியாக வாகனத் தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சரக்கு வேனில் மூட்டை, மூட்டையாக ரேசன் துவரம் பருப்பு கடத்தி வந்தது தெரியவந்தது. வாகனத்தை ஒட்டி வந்த டிரைவர் அதிகாரிகளை பார்த்ததும் குதித்து தப்பி சென்ற நிலையில், அந்த வாகனத்தில் இருந்த 60 மூட்டை 3 ஆயிரம் கிலோ எடையுள்ள ரேசன் துவரம் பருப்பை பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

மேலும் இந்த ரேஷன் துவரம் பருப்பானது, தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் இருந்து விருதுநகர் தனியார் மில்லிற்கு கொண்டு செல்ல இருந்ததாக தனி வட்டாட்சியர் அறிவழகன் கூறினார்.

இந்த கடத்தலுக்கு பின்னால் உள்ள நபர்கள் யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com