வேடசந்தூர் அருகே அடுத்தடுத்து 3 கடைகளில் பணம் கொள்ளை

வேடசந்தூர் அருகே அடுத்தடுத்து 3 கடைகளில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதுகாலை கடையை திறக்க வந்த வியாபாரிகள் பொருட்கள் திருடு போயிருந்ததை கண்டு அ திர்ச்சியடைந்தனர்.
கொள்ளை நடந்த கடையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
கொள்ளை நடந்த கடையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
Published on

வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நால்ரோடு பகுதியில் கடைகள் உள்ளன. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடைகளை பூட்டிச் சென்றனர்.

இரவு நேரத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். வேல் என்பவரின் டீக்கடை பூட்டை உடைத்து ரூ.13,000 பணம் மற்றும் சிகரெட், பீடி பண்டல்களை எடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து அருகில் இருந்த அஸ்கர் என்பவரின் மருந்து கடையில் புகுந்து ரூ.12,000 பணம் மற்றும் ஹார்லிக்ஸ் பாட்டில்களை எடுத்து சென்றனர். மேலும் அடுத்ததாக இருந்த முத்து கிருஷ்ணன் என்பவரது பேக்கரியில் ரூ.8000 பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றனர்.

கடைகளில் கண்காணிப்பு கேமரா இருப்பதை கவனித்த கொள்ளையர்கள் பதிவாகி இருந்த ஹார்டு டிஸ்குகளையும் கழற்றி எடுத்து சென்று விட்டனர். இன்று காலை கடையை திறக்க வந்த வியாபாரிகள் பொருட்கள் திருடு போயிருந்ததை கண்டு அ திர்ச்சியடைந்தனர்.

இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கடையில் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் வேறு கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் முகம் பதிவாகியுள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com