வருசநாடு அருகே வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் படுகாயம்- கர்ப்பிணி உயிர் தப்பினார்

சுவர் இடிந்து விழுவதைப் பார்த்ததும் வினோத்குமார் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.அதிர்ஷ்டவசமாக பாண்டி மீனாவை அங்கிருந்து வினோத்குமார் வெளியேற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
வருசநாடு அருகே வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் படுகாயம்- கர்ப்பிணி உயிர் தப்பினார்
Published on

வருசநாடு:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கீழபூசனூத்து பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 35). கூலித் தொழிலாளி. இவர் தனது மனைவி பாண்டி மீனா மற்றும் மகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக இவரது மண் வீடு இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது கர்ப்பிணி மனைவியான பாண்டி மீனா தனது மகளுடன் உறங்கிக் கொண்டு இருந்தார். சுவர் இடிந்து விழுவதைப் பார்த்ததும் வினோத்குமார் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது அவருக்கும் அவரது மகளுக்கும் காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பாண்டி மீனாவை அங்கிருந்து வினோத்குமார் வெளியேற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து வருசநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com