அம்மையநாயக்கனூர் அருகே தாறுமாறாக ஓடிய கார் விபத்தில் 3 பேர் படுகாயம்

கார் தாறுமாறாக ஓடி எதிர்புறம் சாலையில் உருண்டு பாலத்தின் தடுப்பு சுவர் மீது தொங்கியது.விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய கார் மேம்பாலத்தில அந்தரத்தில் தொங்கி நிற்பதை படத்தில் காணலாம்.
விபத்தில் சிக்கிய கார் மேம்பாலத்தில அந்தரத்தில் தொங்கி நிற்பதை படத்தில் காணலாம்.
Published on

கொடைரோடு:

திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார் 4 வழிச்சாலையில் அம்மையநாயக்கனூர் நக்கம்பட்டி மேம்பாலம் என்ற இடத்தில் வந்தபோது நிலைதடுமாறி தாறுமாறாக ஓடி எதிர்புறம் சாலையில் உருண்டு பாலத்தின் தடுப்பு சுவர் மீது தொங்கியது.

இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த வெள்ளி குறிச்சியைச் சேர்ந்த ராணுவ வீரரான அசோக் குமார் (24), அதே ஊரைச் சேர்ந்த முத்து மகன் கருப்பு ராஜா (34), மாரி மகன் சரவணன் (20) ஆகியோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லபட்டனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை அந்த வழியாக வந்த இளைஞர்கள் சிலர் உதவி செய்து ஆம்புலன்சை வரவழைத்து சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். போக்குவரத்து பாதிப்பையும் அவர்கள் சீர் செய்து ஒழுங்குபடுத்தினர்.

அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் விபத்தில் அப்பளம் போல நொறுங்கிய காரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com