தொழிலாளியை தாக்கிய சிறுவன் உள்பட 3 பேர் கைது

தகாத வார்த்தைகள் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்துக்காக பணம் கேட்டார்.
தொழிலாளியை தாக்கிய சிறுவன் உள்பட 3 பேர் கைது
Published on

கோவை:

கோவை கெம்பட்டி காலனி அருகே உள்ள அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அஜித் என்ற ரவிக்குமார் (வயது 26). தங்க நகை தொழிலாளி. இவரிடம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்துக்காக அதே பகுதியை சேர்ந்த மணி (19) என்பவர் பணம் கேட்டார். ஆனால் ரவிக்குமார் பணம் கொடுக்க மறுத்து விட்டார். சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரவிக்குமார் மணியை தாக்கினார். இது குறித்து அவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (20), 17 வயது சிறுவன் ஆகியோரிடம் தெரிவித்தார். பின்னர் இவர்கள் 3 பேரும் சென்று ரவிக்குமாரை தகாத வார்த்தைகள் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com