நாசரேத் தலைமை ஆசிரியர் வீட்டில் திருடிய அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது

நாசரேத் குயின் தெருவை சேர்ந்த சுமதிபிரபா என்பவர் வீட்டிலும் நகைகள்-பணம் கொள்ளை போனது.அன்புராஜ் , அவரது தம்பி ரமேஷ், மற்றும் அய்யப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நாசரேத்  தலைமை ஆசிரியர் வீட்டில் திருடிய அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது
Published on

நாசரேத்:

நாசரேத் கதீட்ரல் தெருவை சேர்ந்தவர் அகஸ்டின். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

வீடுகளில் கொள்ளை

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த மோட்டார் சைக்கிள், டி.வி. மற்றும் எலக்ட்ரிக் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

அதேபோல் நாசரேத் குயின் தெருவை சேர்ந்த சுமதிபிரபா என்பவர் வீட்டிலும் நகைகள்-பணம் கொள்ளை போனது.

3 பேர் கைது

இது தொடர்பாக புகாரின் பேரில் நாசரேத் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர்.

அதில் கொள்ளையில் ஈடுபட்டது நெல்லை சுத்தமல்லியை சேர்ந்த ரங்கபாலன் மகன் அன்புராஜ் (வயது22), அவரது தம்பி ரமேஷ் (19) மற்றும் சுத்தமல்லியை சேர்ந்த அய்யப்பன் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com