வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்து தனியார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் பலி

அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி மஞ்சுநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.பின்னால் வந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது.
வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்து தனியார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் பலி
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள கட்டிக்கான பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது25). இவர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவனம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி மஞ்சுநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேபோல் மாடச்சந்திரம் அருகே உள்ள குரள் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (55). இவர் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது பின்னால் வந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது.

அந்த வழியாக சென்ற வர்கள் பெருமாளை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு பெருமாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த இரு விபத்துகள் குறித்து குருபரப்பள்ளி போலீசார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் கிருஷ்ணகிரி, அட்கோ பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தொடுதே பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த வாகனம் மோதியதில் ரமேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

இது குறித்து அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com