என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தேனி அருகே 3 பேர் தற்கொலை
  X

  கோப்பு படம்

  தேனி அருகே 3 பேர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேனியில் குடும்ப பிரச்சினை மற்றும் நோய்கொடுமையால் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தேனி:

  தேனி அல்லிநகரம் வீரப்பஅய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார்(42). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று தனது தோட்டத்திற்கு சென்றவர் அங்கிருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  ஆண்டிபட்டி அருகில் உள்ள அணைக்கரைப்பட்டி கிழக்குதெருவை சேர்ந்தவர் வீருச்சாமி(70). இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகாததால் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  தேனி பாரஸ்ட் ரோடு 3-வது தெருவை சேர்ந்த முருகன் மகன் சூர்யா(25). இவர் வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து ஊர்சுற்றி வந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்தார். இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  Next Story
  ×