தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை

தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி மாவட்டம் கண்டமனூர் அண்ணாநகர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணன்(57). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து ெகாண்டார். கண்டமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெரியகுளம் வீரேஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன்(57). இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேவதானப்பட்டி அருகில் உள்ள காமக்காபட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி மனைவி கஸ்தூரி(34). குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் விருமாயி கொடுத்த புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com