திண்டிவனத்தில் மோட்டார் சைக்கிள் ஷோரூமின் கல்லாவை உடைத்து ரூ.3 லட்சம் திருட்டு

இதனை அவரது மகன் ஜீன்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் நிர்வகித்து வருகின்றனர்காலை 11 மணியளவில் வந்து பார்த்தபோது ஷோரூமில் இருந்த கல்லா உடைக்கப்பட்டு இருந்தது
பணம் திருடுபோன தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமை படத்தில் காணலாம்.
பணம் திருடுபோன தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமை படத்தில் காணலாம்.
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மோட்டார் சைக்கிள் ஷோரூம் செஞ்சி சாலையில் இயங்கி வருகிறது. இது மறைந்த முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. ஹிராசந்த் குழுமத்திற்க்கு சொந்த மானதாகும். இதனை அவரது மகன் ஜீன்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் நிர்வகித்து வருகின்றனர் இந்த ஷோரூமை, அங்கு பணிபுரியும் சந்தோஷ் என்பவர் நேற்று இரவு மூடி பூட்டிவிட்டு சென்றார்.இன்று காலை 11 மணியளவில் வந்து பார்த்தபோது ஷோரூமில் இருந்த கல்லா உடைக்கப்பட்டு இருந்தது.

அதிர்ச்சியடைந்த அவர் கல்லாவை திறந்து பார்த்தபோது, அதிலிருந்த பணம் ரூ.3 லட்சம் திருடு போய் இருந்தது. இது குறித்து ரோஷனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் ரோஷனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுண ர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com