நுங்கம்பாக்கம் ஓட்டலில் பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரகளை செய்த 3 பேர் கைது

நுங்கம்பாக்கம் ஓட்டலில் சாப்பிட சென்ற பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

சென்னை:

நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் மயிலாப்பூர் போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சாப்பிட சென்றார். அப்போது அங்கிருந்த 3 வாலிபர்கள் பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகாத முறையில் பேசி ரகளையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பெண் சப்-இன்ஸ்பெக்டர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com