மாப்பிள்ளையூரணி கோவிலில் 201 திருவிளக்கு பூஜை

கொரோனா நோய்தொற்றிலிருந்து அனைத்து மக்களை காக்க வேண்டி, பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்றது.ஏற்பாடுகளை கோவில் தலைவர் கணேசன், தர்மகர்த்தா திருமணி, ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்கள்.
திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்கள்.
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி குமரன்நகர் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு 201 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

திருவிளக்கு பூஜையில் உலகில் அன்பு, அமைதி, நிலவளம் வேண்டியும், தமிழகத்தில் நல்ல மழை பெய்து கோடைவெயிலின் தாக்கம் குறைந்திடவும், அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைத்திட வேண்டியும், விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டி, கொரோனா நோய்தொற்றிலிருந்து அனைத்து மக்களை காக்க வேண்டியும், பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் கணேசன், தர்மகர்த்தா திருமணி, செயலாளர் பெருமாள், பொருளாளர் முனியசாமி, கவுரவ ஆலோசகர் ராமர், மற்றும் முத்துக்குமார், மகளிர் அணி, இளைஞர் அணி, ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com