புவனகிரி அருகே மூதாட்டி வீட்டின் ஓட்டை பிரித்து 20 பவுன் நகை-பணம் கொள்ளை

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
புவனகிரி அருகே மூதாட்டி வீட்டின் ஓட்டை பிரித்து 20 பவுன் நகை-பணம் கொள்ளை
Published on

புவனகிரி:

புவனகிரி அருகே வீட்டின் ஓட்டை பிரித்து 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பு. மணவெளி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டு ரங்கன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி பூபதி (70). இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர். பூபதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

நேற்று இரவு பூபதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கினர்.

பின்னர் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ. 15 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இன்று அதிகாலை எழுந்த பூபதி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் சத்தம் போடவே அருகே வசித்து வருபவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் உதவியுடன் பூபதி புவனகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பு. மணவெளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com