மினி பஸ்சை அடித்து உடைத்த 2 வாலிபர்கள் கைது

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மினி பஸ்களை இயக்குவதில் டைமிங் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிய வருகிறது.மினி பஸ் கண்ணாடிகளை கல்லால் அடித்து உடைத்தனர்.
மினி பஸ்சை அடித்து உடைத்த 2 வாலிபர்கள் கைது
Published on

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே உள்ள நக்கம்பாடி வடக்கு தெருவில் வசிப்பவர் அன்பழகன் மகன்வந்தியதேவன் (வயது 26). இவர் ஒரு மினி பஸ்சில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். சத்தியமங்கலம் ஊராட்சி வாழ்க்கை கிராமம் வடக்கு தெருவில் வசிக்கும் மாரிமுத்து மகன் விக்னேஷ் (24). தட்டுமால் நடுபடுகை செல்வராஜ் மகன் முனுசாமி (29) ஆகிய இருவரும் வேறு ஒரு மினி பஸ்ஸில் நடத்துனராக பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்குள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மினி பஸ்களை இயக்குவதில் டைமிங் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிய வருகிறது. இதனால் சம்பவத்தன்று நக்கம்பாடி வந்தியதேவன் நடத்துனராக பணியாற்றும் மினி பஸ்சில் இரவு மினி பஸ்சை நிறுத்திவிட்டு உள்ளே படுத்து தூங்கி உள்ளார்.

அப்போது அங்கே வந்த விக்னேஷ், முனுசாமி ஆகிய இருவரும் மினி பஸ் கண்ணாடிகளை கல்லால் அடித்து உடைத்தனர். இதில் உள்ளே படுத்து உறங்கிய வந்தியதேவன் படுகாயம் அடைந்த கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வந்தியதேவன் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு பகவதி சரணம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விக்னேஷ், முனுசாமியை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com