கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்

பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள நடூர் பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் கல்லூரியில் பி.எட் படித்து வந்தார். கடந்த 31-ந் தேதி கல்லூரிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி நந்தினி என்கிற சோனியா (வயது25). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நந்தினி குழந்தை பெற்ற பிறகு மொரப்பூர் அருகேயுள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று நந்தினி குழந்தையை தனது தாயிடம் கொடுத்து விட்டு வெளியே சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து மொரப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

X

Maalai Malar
www.maalaimalar.com