இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

வேனில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 1,250 கிலோ எடை கொண்ட 42 மூட்டை பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது.ஆலந்தலை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக அவர்கள் கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலை மூட்டைகள் படகு மூலம் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், செல்வகுமார், தலைமை காவலர்கள் ராமர், இருதயராஜ், காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் கடலோரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திருச்செந்தூர் உட்கோட்டம் திருச்செந்தூர் போலீஸ் நிலைய எல்லை அருகே கடத்தல் கும்பல் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் ஆலந்தலை ஊருக்கு வடக்கே கணேசபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சென்ற வேனை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது வேனில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 1,250 கிலோ எடை கொண்ட 42 மூட்டை பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது.

அதனை ஆலந்தலை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக அவர்கள் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து பீடி மூட்டைகளை கைப்பற்றிய போலீசார் வேனை பறிமுதல் செய்தனர். மேலும் வேனில் இருந்த ஆலந்தலை ராஜா (வயது29), வேனை ஓட்டி வந்த டிரைவர் தூத்துக்குடி எஸ்.எஸ். மாணிக்கப்புரத்தை சேர்ந்த பாலமுருகன் (35) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com