கம்பத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்துச் சென்ற 2 பேர் கைது

பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் இளம்பெண் கையில் வைத்திருந்த விலையுயர்ந்த செல்போனை பறித்து சென்றனர்.அவர்களை போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
கைதான குப்புச்சின்னு
கைதான குப்புச்சின்னு
Published on

கம்பம்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் சர்மிளா (வயது 28). தனியார் நிதி நிறுவன ஊழியர். இவர் கம்பம் அரசு போக்குவரத்து பணிமனை அருகேயுள்ள இரு சக்கர மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வாகனங்களுக்கு கடன் வழங்கும் பிரிவில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மாலை பணியை முடித்துவிட்டு உத்தமபாளையம் செல்வதற்காக அரசு போக்குவரத்து பணி மனை பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்து சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சர்மிளா கையில் வைத்திருந்த விலையுயர்ந்த செல்போனை பறித்து சென்றனர்.

இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன் ேபரில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து செல்போனை பறித்துச் சென்ற வாலிபர்களை தேடி வந்தனர். போலீசார் விசாரணையில் கம்பம் அருகே உள்ள காமயவுண்டன்பட்டியைச் சேர்ந்த குப்பு சின்னு (வயது 22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து செல்போனை பறித்துச் சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com