புளியரை சோதனை சாவடியில் லாட்டரி விற்ற 2 பேர் கைது

சோதனை சாவடி பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 240 லாட்டரிகள், ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
புளியரை சோதனை சாவடியில் லாட்டரி விற்ற 2 பேர் கைது
Published on

நெல்லை:

புளியரை சோதனை சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்குமார் தலைமையிலான போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கேரளா மாநில லாட்டரி சீட்டுகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிவகிரி அருகே குமாரபுரத்தை சேர்ந்த சிவக்குமார்(வயது 48), களப்பாகுளத்தை சேர்ந்த கணேசமூர்த்தி(52) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 240 லாட்டரிகள், விற்ற பணம் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com