மது விற்ற 2 பேர் கைது

சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.மேலும், அவரிடம் இருந்து 16 மதுபாட்டில்கள், மது விற்பனை செய்யப்பட்ட பணம் ரூ.1,900 பறிமுதல் செய்யப்பட்டது.
மது விற்ற 2 பேர் கைது
Published on

ஈரோடு:

கருங்கல்பாளையம் போலீசார் கிருஷ்ணம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் கருங்கல்பாளையம் கமலாநகரை சேர்ந்த சக்திவேல் (36) என்பதும், அவர் மது விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சக்திவேலை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ஈரோடு பவானிரோட்டில் மது விற்பனை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூர் புதுவயல் பகுதியை சேர்ந்த சாமிதுரையின் மகன் அரவிந்த் (23) என்பவரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து 16 மதுபாட்டில்கள், மது விற்பனை செய்யப்பட்ட பணம் ரூ.1,900 பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com