கீரணத்தத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை திருடிய 2 பேர் கைது

அறையில் பீரோவில் இருந்த 1¾ சவரன் நெக்லஸ், ½ சவரன் தோடு உள்ளிட்டவை காணமாமல் போய் இருந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
கீரணத்தத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை திருடிய 2 பேர் கைது
Published on

சரவணம்பட்டி,

கோவை கீரணத்தம் சைபர் சிட்டி பகுதியை சேர்ந்தவர் தேவ சகாயம்(65). நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சாய்பாபா காலனியில் உள்ள சர்ச்சுக்கு சென்றார்.

பின்னர் வீட்டிற்கு வந்த போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அறையில் பீரோவில் இருந்த 1¾ சவரன் நெக்லஸ், ½ சவரன் தோடு உள்ளிட்டவை காணமாமல் போய் இருந்தது.இவர்கள் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்களை நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தேவசகாயம் கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வந்தனர். கோவில்பாளையம் போலீசார் சரவணம்பட்டி- கீரணத்தம் சாலையில் கல்லுகுழியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் தென்காசி மாவட்டம் வி.கே.புரத்தை சேர்ந்த சுபாஷ்(25), உக்கடம் கரும்புக்கடையை சேர்ந்த ஜெகன்(34) என்பதும், நகையை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நகைகளையும் மீட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com