சின்னமனூரில் 2 பேர் மாயம்

வீட்டைவிட்டு வெளியே சென்ற டிரைவர் உள்பட 2 பேர் மாயமாகினர்.புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சின்னமனூர்:

சின்னமனூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது43). நோய் கொடுமை யால் அவதிப்பட்டு வந்தார். சின்னமனூரில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.

சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் யுவன் (44). லாரி டிரைவர். சம்பவத்தன்று கேரளாவுக்கு லோடு ஏற்றி சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. லாரி அலுவலகத்தில் விசரித்தபோது யுவன் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றது தெரிய வந்தது.

பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இந்த 2 சம்பவங்கள் குறித்து சின்னமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com