சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

கீழ்வேளூர் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்
சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
Published on

 நாகப்பட்டினம்:

கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்

வேளூர் அருகே ஆழியூர் பிரிவு சாலையில் சிக்கவலம் தோப்பு தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 42), சிக்கல் அய்யனார்

கோவில் தெருவில் நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த நல்லபிள்ளை மனைவி போதுமணி (55)

ஆகிய 2 பேரும் சாராயம் விற்றது தெரியவந்தது.

இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com