கோவையில் வெவ்வேறு விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் ஆதாமின் ஆனந்தாஸ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையில் வெவ்வேறு விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி
Published on

கோவை,

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகாபுரத்தை சேர்ந்தவர் ஆதாமின் ஆனந்தாஸ் (வயது 56). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் சரவணம்பட்டி- விநாயகாபுரம் ரோட்டில் நெல்லையப்பர் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஆதாமின் ஆனந்தாஸ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஆதாமின் ஆனந்தாஸ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (54). சம்பவத்தன்று இவர் அதே பகுதியை சேர்ந்த சேகர்(47) என்பவரது மொபட்டில் பின்னால் அமர்ந்து சென்றார். மொபட் மருதம்பட்டி அம்மா நகர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com