பள்ளி மாணவி உள்பட 2 பேர் மாயம்

ஊருக்கு திரும்பி வந்து பார்த்தபோது சிறுமி வீட்டில் இல்லைபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவி உள்பட 2 பேர் மாயம்
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் 17வயது சிறுமி.

இவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் கடந்த 3-ந் தேதி பெங்களூருக்கு சென்றிருந்தனர்.

பின்னர் அவர்கள் ஊருக்கு திரும்பி வந்து பார்த்தபோது சிறுமி வீட்டில் இல்லை. இதனால் பதறிப்போன அவர்கள் பல இடங்களில் சிறுமியை தேடினர். எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சிறுமியின் தாயார் மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது உறவினரான முரளி என்பவர் சிறுமியை பெண் கேட்டு வந்தார்.

அவர் சிறுமி என்பதால் பெண் தரமறுத்து விட்டோம். எனவே, முரளி சிறுமியை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் மொரப்பூரை அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வன் (40). இவரது மனைவி கிருத்திகா (21). இவர்களுக்கு 1½ வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த ஜே.சி.பி. டிரைவர் தேசிங்கு என்பவருடன் கிருத்திகாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வீட்டில் கணவன்-மனைவி இருவரும் தூங்கி கொண்டி–ருந்தனர். மறுநாள் காலை விடிந்ததும் தன்னுடன் தூங்கி கொண்டிருந்த கிருத்திகாவை காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தாமரைச்செல்வன் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் ஜே.சி.பி. டிரைவர் முரளி தனது மனைவி கிருத்திகாவை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்கேத்தின் பேரில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com