சின்னமனூர் அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்

சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் ஒரு மாதமாகியும் வீடு திரும்பவில்லை.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

சின்னமனூர்:

சின்னமனூர் அருகே சீலையம்பட்டியை சேர்ந்தவர் பார்சியாபானு (வயது20). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழ கத்தில் முதலாம் ஆண்டு தொலைதூர கல்வி படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்ைல.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி ப்பார்த்தும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

போடி அம்மாபட்டியை சேர்ந்தவர் முனீஸ்வரன் (35). இவர் வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் ஒரு மாதமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரனை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com