சரவணம்பட்டியில் வீடு புகுந்து கல்லூரி மாணவர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு

சரவணகுமார் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருகிறார்.20 பேர் கொண்ட கும்பல் வெறிசெயலில் ஈடுபட்டது.
சரவணம்பட்டியில் வீடு புகுந்து கல்லூரி மாணவர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு
Published on

கணபதி,

கோவை சரவணம்பட்டி சிவனந்தாபுரம் ஜனதா நகரை சேர்ந்தவர் மணிகண்டன்.

இவரது மகன் சரவணகுமார்(வயது23). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருகிறார்.

நேற்று இரவு அவரது வீட்டில் உறவினர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டி ருந்தனர். இரவு 11 மணியளவில் வீட்டிற்குள் 20 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.

அவர்கள் சரவணகுமாரிடம் காமராஜ பு ரத்தை சேர்ந்த ஒரு வா லிபர் குறித்து கேட்டனர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை ஆயுதங்களால் அடித்து உடைத்து சூறையாடினர்.

பின்னர் தகாத வார்த்தைகளால் பேசி கல்லூரி மாணவர் சரவ ணகுமாரை அரிவாளால் வெட்டினர்.

இதில் அவருக்கு தலை மற்றும் நெற்றியில் வெட்டு காயம் விழுந்தது. இதனை பார்த்து தடுக்க முயன்ற அவரது மாமா பாலசுப்ரமணியத்தையும் அரிவாளால் வெட்டினர்.

இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் அவர்களை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதையடுத்து உறவினர்கள் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com